Tuesday, February 22, 2011

அங்கே ! இங்கே !

பாலூட்டி சீராட்டி
வளர்த்தவள் அங்கே
நானோ பிழைப்பதற்காக
வந்தேன் இங்கே !

மடியில் வைத்து 
தாலாட்டினாள்  அங்கே
மறந்து விட்டே
வாழ்கிறேன் இங்கே !

பிசைந்து கொடுத்து
உணவூடினால் அங்கே
சிலநேரம் உண்ணாமல்
உழைக்கிறேன் இங்கே !

கண் விழித்து
பார்த்துகொண்டாள்  அங்கே
கண்டுகொள்ள யாருமில்லாமல்
தவிக்கிறேன் இங்கே !

துன்பத்திலும் இன்பம்
தந்தாள் அங்கே
இன்பத்திலும் துன்பம்
தான் இங்கே !

பார்க்க நினைத்து
காத்திருக்கிறாள் அங்கே
தாழாத தனிமையில்
தத்தளிக்கிறேன் இங்கே !

உருவாக்கிய உள்ளம்
இருப்பதோ அங்கே
உருகுகின்ற மெழுகை
போல நான் இங்கே !

நினைத்து கொண்டு
வாழ்கிறாள் அங்கே
நினைவெல்லாம் நீமட்டும்தான்
அம்மா இங்கே !!!

No comments:

Post a Comment