என் உள்ளம் பக்குவபட வேண்டும்
பணத்தின் மீது-எப்பொழுதும்
பற்று இல்லாமல் இருக்கவேண்டும்
இன்பத்தையும் துன்பத்தையும் -எந்தநாளும்
சமமாக எண்ண வேண்டும்
மனது அளவிலும் -எவருக்கும்
தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும்
ஆசையென்ற ஒன்று -எப்பொழுதும்
பேராசையாகாமல் காக்க வேண்டும்
பிறர்மனதை புண்படுத்தாமல் - எந்தஒரு
காரியத்தையும் செய்ய வேண்டும்
விட்டுகொடுக்கும் எண்ணம் - என்றுமே
மனதில் வளர வேண்டும்
துன்பத்திலும் பிறருக்காக - எந்தநேரத்திலும்
உதவும் எண்ணம் வேண்டும்
கோபம் என்ற உணர்வு - எந்தசந்தர்பத்திலும்
வெளிபடாமல் இருக்க வேண்டும்
மனதார மன்னிக்க - என்றும்
உள்ளம் நினைத்திட வேண்டும்
வெறுத்து ஒதுகுவோரையும் - எந்தநிலையிலும்
நேசித்து இருக்க வேண்டும்
இப்படி எல்லாவிதமான பக்குவம் - இறக்கும்வரை
எனக்குள் நிலைத்திருக்க வேண்டும்

No comments:
Post a Comment