Tuesday, February 22, 2011

அவள்மட்டும் !!!

எழுதிவைத்த கவிதைகளை 
எடுத்து பார்க்கின்றேன் 
எழுத்துகள் எல்லாம் 
அங்கேயதான் இருக்கின்றன 
ஆனால் எழுத தூண்டியவள் மட்டும் 
எங்கேயோ வாழ்கின்றாள் !
 
 

அங்கே ! இங்கே !

பாலூட்டி சீராட்டி
வளர்த்தவள் அங்கே
நானோ பிழைப்பதற்காக
வந்தேன் இங்கே !

மடியில் வைத்து 
தாலாட்டினாள்  அங்கே
மறந்து விட்டே
வாழ்கிறேன் இங்கே !

பிசைந்து கொடுத்து
உணவூடினால் அங்கே
சிலநேரம் உண்ணாமல்
உழைக்கிறேன் இங்கே !

கண் விழித்து
பார்த்துகொண்டாள்  அங்கே
கண்டுகொள்ள யாருமில்லாமல்
தவிக்கிறேன் இங்கே !

துன்பத்திலும் இன்பம்
தந்தாள் அங்கே
இன்பத்திலும் துன்பம்
தான் இங்கே !

பார்க்க நினைத்து
காத்திருக்கிறாள் அங்கே
தாழாத தனிமையில்
தத்தளிக்கிறேன் இங்கே !

உருவாக்கிய உள்ளம்
இருப்பதோ அங்கே
உருகுகின்ற மெழுகை
போல நான் இங்கே !

நினைத்து கொண்டு
வாழ்கிறாள் அங்கே
நினைவெல்லாம் நீமட்டும்தான்
அம்மா இங்கே !!!

Thursday, February 17, 2011

என் பிறந்தநாள் ஆசைகள்


பிறருக்காக வாழவே -என்றும் 
என் உள்ளம் பக்குவபட வேண்டும் 

பணத்தின் மீது-எப்பொழுதும் 
பற்று இல்லாமல் இருக்கவேண்டும் 
இன்பத்தையும் துன்பத்தையும் -எந்தநாளும் 
சமமாக எண்ண வேண்டும்
மனது அளவிலும் -எவருக்கும் 
தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும்
ஆசையென்ற ஒன்று -எப்பொழுதும் 
பேராசையாகாமல் காக்க வேண்டும்
பிறர்மனதை புண்படுத்தாமல் - எந்தஒரு
காரியத்தையும் செய்ய வேண்டும்
விட்டுகொடுக்கும் எண்ணம் - என்றுமே 
மனதில் வளர வேண்டும்
துன்பத்திலும் பிறருக்காக - எந்தநேரத்திலும் 
உதவும் எண்ணம் வேண்டும்
கோபம் என்ற உணர்வு - எந்தசந்தர்பத்திலும் 
வெளிபடாமல் இருக்க வேண்டும்
மனதார மன்னிக்க  - என்றும் 
உள்ளம் நினைத்திட வேண்டும்
வெறுத்து ஒதுகுவோரையும் - எந்தநிலையிலும் 
நேசித்து இருக்க வேண்டும் 

இப்படி எல்லாவிதமான பக்குவம் - இறக்கும்வரை 
எனக்குள் நிலைத்திருக்க வேண்டும் 

Wednesday, February 16, 2011

மீண்டும் வேண்டும் பள்ளி பருவம்

அன்றோ புத்தகம்
சுமையாக தோன்றியது-இன்றோ
சுமந்து செல்ல ஆசைபடுகின்றோம்

வீட்டுபாடம் எழுதி எழுதி
கை வலித்தது -இன்றோ
எழுதுவதே இல்லை

விடுமுறைக்கு காத்திருந்தோம்
விளையாடி களிப்பதற்கு-இன்றோ
விளையாட நேரம் இல்லை 

பெற்றோரை எதிரித்து ஒருநாளும்
பேசியதில்லை -இன்றோ
எதிர்வாதம் செய்கின்றோம்

நண்பன் , பகைவன் பாகுபாடு
தோன்றவில்லை -இன்றோ
பொறாமை வளர்கிறது

சேமிப்பு இல்லாதவரை
சந்தோசமாக இருந்தோம் -இன்றோ
சேமிப்பதற்காக சந்தோசம் இழந்தோம்

பெரிதாக எதையும்
ஆசைப்படவில்லை -இன்றோ
பேராசை படுகின்றோம்

தாயை தங்கையை தவிர
பெண்ணொன்று தெரியாது -இன்றோ
காதலி என்று சொல்கின்றோம்

கவலைகள் இல்லாமல்
சுற்றி திரிந்தோம் -இன்றோ
கவலைபட்டே காலம் கழிக்கிறோம்

எந்த நேரத்திலும்
மகிழ்ச்சியாய் இருந்தோம் -இன்றோ
மகிழ்சியை தேடுகின்றோம்

இன்னொருமுறை பள்ளி பருவத்தை
திருப்பி தருவாயா இறைவா-இன்றும்   
மனம் ஏங்குகிறது !!!

Monday, February 14, 2011

தாய் உள்ளம்

உனக்காக ஐந்து திங்கள் பத்தியமிருந்தேன்
இன்றோ பசியால் வாடுகின்றேன்
உன்னை இன்றேடுக்க இடுப்புவலி பொறுத்தேன்
இன்றோ இடுப்பொடிந்து கிடக்கின்றேன்
ஒன்றல்ல இரண்டு மகன் இருந்தும்
இன்று அனாதையை இருக்கின்றேன்
உன்னை தாலாட்டி தூங்கவைத்தேன்
இன்றோ தனிமரமாய் துடிகின்றேன்
அன்பாக பத்தில் இருந்த என் மகன்
இன்றோ என்னை ஆதரிக்க மறுகின்றான்
உனக்காகவே நான் வாழ்ந்திருந்தேன்
இன்றோ வாழ வழில்லாமல் தவிக்கின்றேன்
நீ எங்கிருந்தாலும் நலமாய் வாழ
இன்றும் இறைவனை வேண்டுகின்றேன்
இப்படிக்கு
தாய்

மனிதனின் தேடல்!!!

மனிதன் !
பணம் என்று ஒன்றை படைத்தது
எல்லாவற்றையும் வங்கிகொண்டன்
பூமியில் இருந்ததை எல்லாம்
தனக்கு சொந்தமாக்கி கொண்டான்
இருப்பவன் இல்லாதவன் என்று
பணத்தை வைத்து பிரிதும்கொண்டான்
இருந்தும் இன்னும் எதையோ தேடி
கொண்டே இருகின்றான்
உண்மையான அன்பை பணத்தால்
பெறமுடியுமா என்று தேடுகிறான்
எங்கு தேடினாலும் அன்பு கடையில் கிடைபதில்லை
என்று அவனுக்கு தெரியவில்லை
இருந்தும் தேடிக்கொண்டே இருகின்றான் !!! 

ஹைக்கு

அழுகை
இந்த உலகத்தில்
என் வருகையை முதலில்
தெரிவித்தது

அன்னதானம்
ஒரு பிடி கொடுத்தால்
நூறு ஆண்டுகள்
வாழலாம்

தொலைபேசி
மணி அடித்தால்
உன் கைதழுவ
காத்திருக்கும்

தாய்
உனக்காக இன்னொருமுறை
இறந்து
பிறந்தவள்

கடவுள்
எங்கே இல்லை
எங்கும் இருக்கிறார்
உனக்குள் தேடிபார்!!!

ஒரு நொடி!!!

புரிந்துகொள்ள கேட்டிருந்தால்
ஓர் ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்திருப்பேன்
அவளோ
பிரிந்துசெல்ல ஒரு நொடி கேட்டாள்? 

பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

நிலவு தூங்காமல் உன் விட்டத்தில்
விழித்திருக்கிறது-ஏன் தெரியுமா?
உன்னை குளிரவைகத்தான் !

மலர்கள் எல்லாம் விடியலுக்காக
காத்திருகிறது-ஏன் தெரியுமா?
உனக்கு மாலையகத்தான் !

தென்றல் ஏனோ உன் வாசலையே
சுற்றித்திரிகிறது-ஏன் தெரியுமா ?
உன்னை முதலில் தழுவத்தான்!

பறவைகள் எல்லாம் உன் மாடத்தில்
வட்டமிடுகிறது -ஏன் தெரியுமா ?
உன்னை பற்றி படத்தான் !

நானும் உன் முன்னாடி
காத்திருக்கிறேன் -ஏன் தெரியுமா?
உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லத்தான் !

ரசிகின்றேன்!!

கண்களுக்கு அருகில் அழகாக 
தோன்றிய போதெல்லாம் 
உன்னை ரசிக்காத நான் -இன்று 
கண்காணாத தூரத்தில் இருந்து 
உன் புகைப்படத்தை ரசிகின்றேன்

பொறியியல் கல்லூரி காதல்!!!


கல்லூரி பருவத்தில் உன்னை மட்டுமே
என் கண்கள் பார்த்திருந்தது

நான் பார்ப்பது தெரிந்தும் நீ
என்னை பார்க்க மறுத்துவிட்டாய்

உன்னோடு பேச நெருங்கிய போதேல்லாம்
பாடத்தை மட்டுமே பேசினேன் 

பலநாள் பார்த்திருக்கிறேன் ஆனால்
அன்று ஒருநாள் நீ பார்த்த
உன் பார்வையின் அர்த்தம் புலப்படவில்லை

என் இரவுகள் எல்லாம்
உன் பார்வை ஒன்றை மட்டுமே நினைத்திருந்தேன் 

நீ என்னதான் நினைதாய் என்று எனக்கு
தெரியாமலே போய்விட்டது

இன்றும் அதை நினனத்துகொண்டே
இரவில் கண்மூடுகின்றேன் !!

காதலர் தினம்!!!

வருடத்தின் இந்த நாள்
மிக முக்கியமான நாள் !

அன்று பார்த்தேன் ,பழகினேன், நேசித்தேன்
இன்று வார்த்தையாக்கும் நாள் !

கண்ணோடு கண் பேச
காத்திருக்கும் நாள்!

கண்ணாடியில் உன்னைப்பற்றி பேசியதை
உன் முன்னே பேசும் நாள் !

கனவில் நடந்ததை எல்லாம்
நினைவாக்கும் நாள் !

பூவை ரசிக்கும் நான்
உன்னை ரசிக்கவைக்கும் நாள் !

நண்பனுக்கு மட்டும் தெரிந்த உண்மையை
உனக்கு தெரிவிக்கும் நாள் !

என் கவிதையை உனக்கு
வசிக்கும் நாள் !

இரண்டு உள்ளங்கள் மனம்விட்டு
பேசிக்கொள்ளும் நாள் !

உனக்கு நான் ,எனக்கு நீ என்று
பத்திரம் தீடிகொள்ளும் நாள் !

உனக்காக மட்டுமே நான் வாழ்வேன் என்று
உறுதிசெய்யும் நாள் !

என்னோடு உன்னை
சேர்த்துவைக்கும் உன்னதமான நாள் !